
விஜய் தேவரகொண்டா படத்திற்கு இசையமைக்க அனிருத் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
தமிழ் திரையுலகில் தன் இசைக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் அனிருத் தற்போது தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். தற்போது தமிழில் ‘ஜெயிலர்’, ‘இந்தியன்2’, ‘லியோ’ ஆகிய படங்கள் அனிருத் கைவசம் உள்ளது. தெலுங்கில் சமீபத்தில் இயக்குநர் ராஜமெளலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தில் ஒரு பாடலுக்கு பின்னணி பாடியிருந்தார் அனிருத். மேலும், ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் 30-வது படத்திற்கும் இசையமைக்கிறார் அனிருத்.
இந்தப் படத்தை அடுத்து தற்போது கவுதம் தின்னனுரி இயக்கும் விஜய்தேவரகொண்டாவின் 12-வது படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத். இதற்கு முன்பு கவுதம் தின்னனுரி இயக்கிய ‘ஜெர்ஸி’ படத்திற்கு அனிருத்தான் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் விஜய்தேவரகொண்டா காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு இந்த வருடம் ஜூலையில் தொடங்க இருக்கிறது. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.