
கவின் அடுத்து நடிக்க உள்ள திரைப்படம் குறித்தானத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
‘டாடா’ படத்தை அடுத்து நடிகர் கவின் அடுத்து நடிக்க இருக்கும் படம் குறித்தானத் தகவல் வெளியாகியுள்ளது. ’லிஃப்ட்’, ‘டாடா’ என நடிகர் கவின் நடித்து வெளியாகியுள்ளத் திரைப்படங்கள் இளைஞர்கள் மட்டுமில்லாமல் குடும்ப பார்வையாளர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில், கவினின் அடுத்தப் படம் குறித்தானத் தகவல் வெளியாகியுள்ளது. நடன இயக்குநரும் நடிகருமான சதீஷ் கிருஷ்ணன் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில்தான் கவின் கதாநாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ‘பியார் பிரேமா காதல்’ போல நகரத்துக் காதலை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக இருக்கிறது. ஏப்ரல் மாதம் படப்பிடிப்புத் தொடங்க இருக்கும் நிலையில் கதாநாயகி தேடலில் படக்குழு தற்போது இருக்கிறது. விரைவில் படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.