அஜித்தின் அடுத்த படத்தில் இணையும் அனிருத்

அஜித்தின் அடுத்த படத்தில் இணையும் அனிருத்

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் ‘வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் மும்மரமாக நடந்துவருகின்றன. ‘வலிமை’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே, அஜித்தின் அடுத்தப் படமும் போனி கபூர் தயாரிப்பில், இயக்குநர் ஹெச்.வினோத்தான் இயக்குகிறார் என்ற செய்தி வெளியாகி இருந்தது. தற்போது, அஜித்தின் அடுத்த திரைப்படத்துக்கான இசையமைப்பாளராக அனிருத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘வலிமை’ திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 2 மாதங்களுக்கு முன்னால் வெளியான ‘வலிமை’ திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகளில், அஜித்துக்குக் கொடுத்திருந்த தீம் இசை அஜித் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. இதைத் தொடர்ந்து அடுத்த படத்துக்கு இசையமைப்பாளர் இமானை அஜித் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று கூறப்பட்டுவந்த நிலையில், தற்போது அஜித்தின் அடுத்த திரைப்படத்துக்கு இசை அனிருத் என்று செய்திகள் கசிந்துள்ளன.

ஏற்கெனவே, ‘வேதாளம்’ திரைப்படத்தில் ‘ஆலுமா டோலுமா’ என்ற பாடல் மூலம் அஜித் ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்றவர் அனிருத். விரைவில், அஜித்தின் அடுத்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பில் இசை அனிருத் என்பதையும் எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in