அஜித்தை அடுத்து விஜய்க்கும் அறிமுகப் பாடல் பாடியிருக்கும் அனிருத்?

அஜித்தை அடுத்து விஜய்க்கும் அறிமுகப் பாடல் பாடியிருக்கும் அனிருத்?

’துணிவு’ படத்தை அடுத்து ‘வாரிசு’ படத்திலும் விஜய்க்கு அனிருத் பாடல் பாடி இருக்கிறார்.

’பீஸ்ட்’ படத்திற்கு அடுத்து நடிகர் விஜய் நடித்திருக்கும் ‘வாரிசு’ மற்றும் ‘வலிமை’ படத்திற்குப் பிறகு நடிகர் அஜித் நடித்திருக்கும் ‘துணிவு’ ஆகிய இரண்டு படங்களும் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாக இருக்கிறது. இரண்டு படங்களுக்கும் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘பீஸ்ட்’ படத்தில் இருந்து ‘ரஞ்சிதமே’ பாடல் விஜய் குரலில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ‘வாரிசு’ படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

இன்னொரு பக்கம் ‘துணிவு’ படத்திற்கும் பாடல் குறித்தான அப்டேட்டை இசையமைப்பாளர் ஜிப்ரான் பகிர்ந்திருந்தார். இதில் இசையமைப்பாளர் அனிருத் அஜித்திற்கு பாடல் பாடியிருப்பதை புகைப்படத்தோடு ஜிப்ரான் பகிர்ந்திருந்தார். இந்த நிலையில், விஜய்யின் ‘வாரிசு’ படத்திலும் அனிருத் விஜய்க்கு பாடல் பாடியிருக்கிறார். இதுதான் படத்தில் விஜய்யின் அறிமுகப் பாடலாக இருக்கும் எனவும், தமனின் பிறந்தநாளான நவம்பர் 16 அன்று இது வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in