
’அனிமல்’ படத்தில் இருந்து தற்போது வெளியாகியுள்ள பாடல் முழுக்க நிரம்பியுள்ள முத்தக்காட்சிகளால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சந்தீப் வங்கா இயக்கத்தில் நடிகர்கள் ரன்பீர், ராஷ்மிகா நடித்துள்ள திரைப்படம் ‘அனிமல்’. சமீபத்தில் இதன் டீசர் வெளியானது. சந்தீப் வங்காவின் ‘அர்ஜூன் ரெட்டி’ பட சாயல் இதிலும் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், டிசம்பர் மாதம் வெளியாக இருக்கும் இந்தப் படத்தில் இருந்து, ‘நீ வாடி’ என்ற ரொமான்டிக் பாடல் இன்று வெளியாகியுள்ளது.
இந்தப் பாடலை ராகவ் சைதன்யா, பிரீத்தம் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். ஜேம் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். இந்த பாடலில் அதிக அளவு லிப் லாக் காட்சிகள் நிரம்பி உள்ளதை பார்த்து ரசிகர்கள் வாயடைத்து போய் உள்ளனர்.
பாலிவுட் போனதும் ராஷ்மிகா மந்தனா ஆளே மாறிவிட்டதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால், ராஷ்மிகாவோ பாலிவுட்டில் நுழைந்தது, தனக்கு நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்து வருவது பற்றி தனக்கு நல்ல நேரம் தொடங்கிவிட்டது என சிலாகித்து வருகிறார்.
இதையும் வாசிக்கலாமே...
பரபரப்பு... முதல்வர் வீட்டின் மீது கல்வீச்சு!
வைரல் வீடியோ: நடுரோட்டில் டூவீலரில் காதலர்கள் சில்மிஷம்!
ஒரு நாள் பிரிட்டன் தூதரான சென்னை இளம்பெண்! குவியும் வாழ்த்துகள்!
உஷார்... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
அடி தூள்... பொன்னியின் செல்வனாக கலக்கும் அஜித்! ரசிகர்கள் கொண்டாட்டம்!