பிரபல நடிகர் சடலமாக மீட்பு: திரையுலகினர் அதிர்ச்சி

பிரபல நடிகர் சடலமாக மீட்பு: திரையுலகினர் அதிர்ச்சி

பிரபல மலையாள நடிகர் சடலமாக மீட்கப்பட்டிருப்பது திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல மலையாள நடிகர் சரத் சந்திரன் (37). கொச்சியைச் சேர்ந்த இவர், ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். பின்னர் டப்பிங் கலைஞராக சில படங்களில் பணிபுரிந்தார். ’அனீசியா’ என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமான இவர், சூப்பர் ஹிட்டான ’அங்கமாலி டைரிஸ்’ படத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார். தொடர்ந்து, 'கூடே', 'ஒரு மெக்சிகன் அபரதா' உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் அவருடைய உடல் உயிரிழந்த நிலையில் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவர் எதற்காக உயிரிழந்தார் என்ற விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சரத் சந்திரனிடன் திடீர் உயிரிழப்பு மலையாள சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவருடன் நடித்தவர்கள், சமூக வலைதளங்களில் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in