சைக்கோ த்ரில்லர் படத்தில் ’அங்காடித் தெரு’ மகேஷ்

‘ஏவாள்’ திரைப்படத்தில் ...
‘ஏவாள்’ திரைப்படத்தில் ...

’அங்காடித் தெரு’ மகேஷ் நடிக்கும் சைக்கோ த்ரில்லர் படத்துக்கு, ‘ஏவாள்’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

’அங்காடித்தெரு’ மகேஷ் நடிக்கும் படம் ’ஏவாள்’. இதில் 5 கதாநாயகிகள் நடிக்கிறார்கள். பிரதான நாயகியாக மோக்க்ஷா நடித்திருக்கிறார். மற்றும் கௌரி சர்மா, மதுமிதா, அக்ஷரா ராஜ், பர்சிதா சின்கா, மிப்பு, பிரவீன், மிதுன் உட்பட பலர் நடிக்கின்றனர். நீளமான தாடி வைத்துள்ளவர்களுக்கான போட்டியில் உலக அளவில் 2-ம் இடமும், இந்திய அளவில் முதலிடமும் பெற்ற ப்ரவீன் பரமேஸ்வரர் முக்கியமான பாத்திரம் ஏற்றுள்ளார்.

மகேஷ், மோக்க்ஷா
மகேஷ், மோக்க்ஷா

படத்தை ஜித்தேஷ் கருணாகரன் இயக்கியுள்ளார். ஆர்ஏ1என்டர்டெய்ன்மென்ட் வழங்கும் இந்தப் படத்தை, ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. கிருஷ்ணா பி.எஸ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, ரெஜிமோன் இசை அமைத்துள்ளார்.

தனது காதலியின் திடீர் மரணத்துக்கு, முகம் மறைத்துத் திரியும் சைக்கோ கொலைகாரன்தான் காரணம் என்ற உண்மை நாயகனுக்குத் தெரியவருகிறது. அவனைப் பழிவாங்க புறப்படுகிறான். இதற்கிடையில் பில்லி சூனியம் ஏவல் போன்ற அமானுஷ்ய சக்திகள் விளையாடுகின்றன. இதன் பின்னணியில் கதை செல்லும். படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டிரெய்லரை, பொங்கல் அன்று படக்குழு வெளியிட்டுள்ளது. “படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா விரைவில் நடைபெறும்’’ என்கிறது படக்குழு.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in