`உண்மையா இருக்க விரும்புகிறேன்'- நடிப்புக்கு திடீர் ஓய்வு அறிவித்தார் `ஸ்பைடர்மேன்'

`உண்மையா இருக்க விரும்புகிறேன்'- நடிப்புக்கு திடீர் ஓய்வு அறிவித்தார் `ஸ்பைடர்மேன்'
ஆண்ட்ரு கார்ஃபீல்ட்

ஸ்பைடர்மேன் நடிகரான ஆண்ட்ரு கார்ஃபீல்ட், நடிப்புக்கு சில காலம் ரெஸ்ட் விடுவதாகத் தெரிவித்துள்ளார்.

பிரபல ஹாலிவுட் நடிகர் ஆண்ட்ரு கார்ஃபீல்ட். பாய் ஏ, லயன்ஸ் ஃபார் லாம்ப்ஸ், தி அமேஸிங் ஸ்பைடர்-மேன், அமேஸிங் ஸைபடர்-மேன் 2, 99 ஹோம்ஸ், டிக், டிக்...பூம், ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். கடந்த வருடம் முழுவதும் ’அண்டர் த பேனர் ஆஃப் ஹெவன்’ (Under the Banner of Heaven)’ என்ற தொலைக்காட்சித் தொடருக்காகத் தொடர்ந்து பிசியாக இருந்த இவர், இப்போது திடீரென நடிப்புக்கு ரெஸ்ட் விடுவதாகத் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, ``நடிப்புக்கு கொஞ்சம் ஓய்வு கொடுக்கப் போகிறேன். அடுத்து என்ன செய்ய வேண்டும்; நான் யாராக இருக்க வேண்டும் என்பதை மறுபரிசீலனை செய்ய இருக்கிறேன். சிறிது காலம் சாதாரணமாக இருக்க வேண்டும்'’ என்று கூறியுள்ளார்.

இந்த ஓய்வு நேரத்தில் என்ன செய்வீர்கள்? என்று கேட்டபோது, ``விடுமுறையில் செல்ல முடியும் என நம்புகிறேன். நான் படுத்துக்கொள்ள விரும்புகிறேன். கொஞ்சம் சிந்திக்க நினைக்கிறேன். உண்மையாக இருக்க விரும்புகிறேன்'' என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.