
சின்னத்திரை தொகுப்பாளினி அர்ச்சனா மாணவர்களின் நக்கல் கமென்ட்க்கு பதிலடி கொடுத்துள்ளார்.
பிரபல சின்னத்திரை தொகுப்பாளினியான அர்ச்சனா கடந்த வருடத்தில் தனது யூடியூப் சேனலில் தன் வீட்டில் உள்ள பாத்ரூமை சுற்றி காட்டி ‘பாத்ரூம் டூர்’ என வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது பார்வையாளர்களிடையே கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. ஒரு சிலர் இதற்கு வரவேற்பு கொடுத்த நிலையில், பலரும் இதனை கேலி கிண்டல் செய்தனர். இதற்கு அர்ச்சனா, பதிலடியும் கொடுத்திருந்தார். இந்த நிலையில், சமீபத்தில் அர்ச்சனா கல்லூரி விழா ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராக சென்றிருந்தார். இதில் அவரது பாத்ரூம் வீடியோவை கிண்டல் செய்யும் வகையில் மாணவர்கள் சிலர் கமென்ட் அடித்தனர்.
அதற்கு பதில் கூறிய அர்ச்சனா, ‘நான் எப்படி பாத்ரூமில் மலம் கழிக்கிறேன் என்பதை காண்பிக்கவில்லை. பாத்ரூமை எப்படி சுத்தமாக வைத்திருப்பது என்பதைத்தான் காண்பித்தேன். பாத்ரூமை காட்டுவது அப்படி ஒன்றும் தவறான விஷயம் கிடையாது. உங்கள் வீட்டு பாத்ரூமும் காட்டும் நிலையில் இருந்தா காட்டலாம்’ எனத் தெரிவித்துள்ளார்.