25 வருடங்களாக எங்க குடும்பத்தின் கனவு இது... நெகிழ்ந்த விஜே அர்ச்சனா!

கணவருடன் விஜே அர்ச்சனா...
கணவருடன் விஜே அர்ச்சனா...

”கடந்த 25 வருடங்களாக எங்கள் குடும்பத்தின் கனவு இது. இதற்காக தான் இவ்வளவு நாட்கள் உழைத்தோம்” என விஜே அர்ச்சனா புது கார் வாங்கியது குறித்து நெகிழ்ச்சியாகப் பகிர்ந்துள்ளார்.

புது கார் வாங்க வேண்டும் என்பது பெரும்பாலான மிடில் கிளாஸ் குடும்பத்தினர் கனவாக இருக்கும். அப்படி தன் அப்பாவின் ஆசையை நிறைவேற்ற 25 வருடங்களாக உழைத்து இன்று நிறைவேற்றியுள்ளோம் என தொகுப்பாளினி அர்ச்சனா எமோஷனலாக பதிவிட்டுள்ளார்.

தங்களது கனவு காரை வாங்கியதற்காக கணவன், மகள், அம்மா, தங்கை என குடும்பத்துடன் சென்று கேக் வெட்டி மகிழ்ந்துள்ளார் அர்ச்சனா. மேலும், ‘சாதாரண பெண்ணின் கனவு நிறைவேறியுள்ளது’ என்றும் கூறியுள்ளார்.

இந்த வீடியோவைப் பகிர்ந்து, “நம் வாழ்வில் ஒவ்வொரு நாளும் ஒரு கனவைத் துரத்துகிறோம். நானும் என் தங்கை அனிதாவும் கார் ஓட்டக் கற்றுக்கொண்ட காலத்திலிருந்தே, எங்கள் அப்பா எங்களுடன் சேர்ந்து மெர்சிடெஸ் பென்ஸ் கார் ஓட்ட வேண்டும் என்று கனவு கண்டார். மீடியாவில் நான் இருந்த இந்த 25 வருடங்களில் 24 வருடங்கள் அப்பாவின் கனவை நிறைவேற்ற ஓடினேன்.

இந்தத் தருணத்தில் வானத்தைப் பார்த்து, 'அப்பா! நாங்கள் கனவை நிறைவேற்றி விட்டோம்' என கத்த வேண்டும் போல இருக்கிறது. எங்கள் கனவுகளுக்கு உற்சாகம் அளித்து, எங்கள் எல்லா ஏற்ற தாழ்வுகளிலும் தைரியமாக எங்களுடன் நின்ற ஆண்களுக்கும் நன்றி. உங்கள் வாழ்க்கையின் பெண்களை கொண்டாடியதற்கு வாழ்த்துகள்! உங்களை விட உலகில் யாரும் எங்களை நன்றாக கவனித்துக் கொள்ள முடியாது” என எமோஷனலாகியுள்ளார்.

அர்ச்சனா மெர்சிடெஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஜிஎல்சி 220டி மாடல் காரை வாங்கியுள்ளார். இதன் விலை ரூ.77 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. அர்ச்சனா வாங்கியுள்ள காரின் விலை ஒரு கோடி வரை இருக்கும் எனத் தெரிகிறது. சன் தொலைக்காட்சியின் தொண்ணூறுகளின் இறுதியில் ஒளிபரப்பான ‘காமெடி டைம்’, ‘இளமை புதுமை’ நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர் தொகுப்பாளினி அர்ச்சனா. திருமணம், குழந்தை என சில வருடங்கள் பிரேக் எடுத்தவர் இப்போது சின்னத்திரையில் மீண்டும் பிஸியாகி இருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in