‘நீதான் ஹீரோ!’ - ‘டான்’ படத்தில் நடித்த ஆர்ஜே விஜயை நெகிழவைத்த அஞ்சனா

‘நீதான் ஹீரோ!’ -  ‘டான்’ படத்தில் நடித்த ஆர்ஜே விஜயை நெகிழவைத்த அஞ்சனா

அறிமுக இயக்குநர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'டான்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியிலும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

இப்படத்தில் சிவகார்த்திகேயனின் நண்பனாக ஆர்.ஜே.விஜய் நடித்திருப்பார். விஜயின் கதாபாத்திரத்தையும் அவருடைய நடிப்பையும் பார்த்துவிட்டு அவருடைய தோழியும் தொகுப்பாளருமான அஞ்சனா ட்வீட் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

‘இந்த ட்வீட் என்னுடைய நண்பனுக்காக! எப்பவுமே நாம என்ன பண்ணினாலும் அது ரசிச்சு, ஊக்குவிக்கக்கூடிய நண்பன் ஒருவன் எப்பவுமே நம் கூடவே இருப்பான். அதுபோல ஒரு நண்பன் தான் 'டான்' படத்தில் விஜயின் கதாபாத்திரமும். உன்னுடைய கதாபாத்திரத்தை படத்துல ரொம்பவே அழகா பண்ணிருக்க, நீயும் ரொம்ப அழகா இருந்த. உன்னை நினைச்சு எப்பவும் போல எனக்குப் பெருமைதான். இன்னும் பெரிய அளவில் நீ வருவ!

என்ன பண்ணாலும் அந்த இடத்துல நீதான் ஹீரோ! நீ பன்முகத் திறமை கொண்டவன். ஒரு பெரிய ஹீரோவின் படத்துல உன்னைய பெரிய திரையில் பார்க்கும்போது என் கண்ணுல தண்ணி வந்துடுச்சு. உன்னுடைய கடின உழைப்பு நிச்சயம் உனக்குத் திரும்ப கொடுக்கும் ரொம்பவே சந்தோஷம்' என அந்த ட்வீட்டில் மகிழ்ச்சியாகத் தெரிவித்துள்ளார் அஞ்சனா.

Related Stories

No stories found.