தேவர் திருமகனாரின் படம் இருந்திருந்தால் சும்மா இருப்பீர்களா? - பாரதிராஜாவுக்கு அன்புமணி கேள்வி

‘ஜெய் பீம்’ திரைப்பட விவகாரம்
தேவர் திருமகனாரின் படம் இருந்திருந்தால் சும்மா இருப்பீர்களா? - பாரதிராஜாவுக்கு அன்புமணி கேள்வி

சூர்யா நடித்து, தயாரித்து நவ.2-ல் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான ‛ஜெய் பீம்’ திரைப்படத்துக்கு, ஒருபக்கம் பாராட்டுகள் கிடைத்தாலும், கடுமையான சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது. குறிப்பாக, தங்களது சமூகத்தை இழிவுபடுத்தியதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் மற்றும் வன்னியர் சங்க அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த விஷயத்தில் அன்புமணிக்கு பாரதிராஜா கடிதம் ஒன்று எழுதியிருந்தார். அதில், ‘ஒரு படைப்பின் சுதந்திரத்தை அதன்படியே விட்டுவிடுவது இன்னும் அதிகமான நல்ல படைப்புகளைக் கொண்டுவர உதவும். சினிமாவை விட இங்குக் கவனம் செலுத்த நிறைய வேலைகள் இருக்கின்றன. தங்கள் தகுதிக்கு நீங்கள் இங்கு வரவேண்டாமே. எங்கள் திரைத் துறையை விட்டுவிடுங்கள். யாருக்குப் பயந்து படம் எடுக்க வேண்டும் எனத் தெரியவில்லை. இப்படியே போனால் ஒவ்வொரு அரசியல்வாதிகளின் வாசல்களிலும் எங்கள் படைப்பாளிகள் கதை சொல்லக் காத்திருக்க வேண்டுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. நீங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க மாற்றங்களும் செய்யப்பட்டிருக்கிறது. திரைத் துறையை அதன் இயல்பில் இயங்க விட கேட்டுக்கொள்கிறேன்’ என தெரிவித்திருந்தார்.

இக்கடிதத்துக்குப் பதிலளிக்கும் விதமாக, இன்று அன்புமணி ராமதாஸ் பாரதிராஜாவுக்கு 5 பக்கங்கள் கொண்ட கடிதமொன்றை எழுதியுள்ளார். அதில், ‘இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க முயற்சித்தபோது, தடுத்தீர்களே! அப்போது எங்கே போனது உங்கள் படைப்பு சுதந்திரம்? சமீபத்தில் வெளியான ‘ஃபேமலி மேன் -2 தொடரை முழுவதும் தடைசெய்ய வேண்டுமென்று கடுமையான எச்சரிக்கை விடுத்தீர்கள். அப்பொழுது எங்கே போயிற்று உங்கள் படைப்புச் சுதந்திரம்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் அன்புமணி ராமதாஸ்.

தேவர் திருமகனாரின் படம் இருந்திருந்தால் சும்மா இருப்பீர்களா? - பாரதிராஜாவுக்கு அன்புமணி கேள்வி
யாருக்குப் பயந்து படம் எடுக்க வேண்டும் எனத் தெரியவில்லை - அன்புமணி ராமதாஸுக்கு பாரதிராஜா கடிதம்

மேலும் அவரது கடிதத்தில், ‘ஜெய்பீம் திரைப்படத்தில் சாதிவெறி பிடித்த கொடுமைக்கார சைக்கோ காவல் உதவி ஆய்வாளர் (வில்லன்) இல்லத்தில் மாட்டியிருக்கும் காலண்டரில் வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டம் இல்லாமல் நீங்கள் போற்றி வணங்கும் தேசியமும், தெய்வீகமும் எனது இரண்டு கண்கள் என்று முழக்கமிட்ட தேவர் திருமகனாரின் படம் இருந்தால் நீங்களும், தேவர் சமுதாயமும் சும்மா இருப்பீர்களா? அல்லது கொங்கு மக்களால் கடவுளுக்கு இணையாக வழங்கப்படும் வீரத்தின் விளைநிலம் தீரன் சின்னமலை அவர்களின் உருவப்படம் அச்சிடப்பட்ட நாட்காட்டி இருந்திருந்தால் அவர்கள் கொதித்து எழுந்து இருக்க மாட்டார்களா? அண்ணல் அம்பேத்கரின் புகைப்படம் இருந்திருந்தால் என்னவாகி இருக்கும்? படைப்புச் சுதந்திரம் என்று சும்மா இருந்து இருப்பீர்களா?’ என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அன்புமணி ராமதாஸின் முழு கடிதம்:

Attachment
PDF
பாரதிராஜாவுக்கு அன்புமணியின் கடிதம்.pdf
Preview

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in