`நடிகர் தனுஷ் குறித்து பெருமைப்படுகிறேன்'- திடீரென பாராட்டும் அன்புமணி

`நடிகர் தனுஷ் குறித்து பெருமைப்படுகிறேன்'- திடீரென பாராட்டும் அன்புமணி

`தி கிரே மேன்' என்ற ஹாலிவுட் நடித்த நடிகர் தனுஷை பாராட்டியுள்ளார் பாமக தலைவர் அன்புமணி.

`அவெஞ்சர்ஸ்’ உட்பட சில ஹாலிவுட் ஆக்‌ஷன் படங்களை இயக்கிய ரூசோ பிரதர்ஸ் என்கிற ஜோ ரூஸோ மற்றும் அந்தோணி உருவாக்கியுள்ள படம் ’தி கிரே மேன்.’ இந்தப் படத்தில் ஹாலிவுட் நடிகர்கள் கிறிஸ் ஈவான்ஸ், ரியான் காஸ்லிங், அனா டெ அர்மாஸ், ஜெசிக்கா ஹென்விக் உட்பட பலர் நடிக்கின்றனர். இவர்களுடன் தனுஷும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கடந்த மாதம் ‘தி க்ரேமேன்’ படம் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்நிலையில், இந்த படத்தில் நடித்த நடிகர் தனுஷை பாராட்டியுள்ளார் பாமக தலைவர் அன்புமணி. இது குறித்து இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், "நேற்று படம் ‘தி க்ரேமேன்’ பார்த்து மகிழ்ந்தேன். ஒரு ஹாலிவுட் படத்தில் நடித்த நடிகர் தனுஷ் பற்றி பெருமையாக உணர்ந்தேன். நடிகர் தனுஷின் அனைத்து எதிர்கால முயற்சிகளிலும் தமிழ்நாடு மற்றும் இந்தியாவிற்கு மேலும் பல விருதுகளை கொண்டு வர எனது வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in