ஓடிடி தளத்தில் வெளியாகும் ‘அன்பறிவு’

இரட்டை வேடத்தில் ஹிப்ஹாப் ஆதி
ஓடிடி தளத்தில் வெளியாகும் ‘அன்பறிவு’

இசையமைப்பாளராக அறிமுகமாகி, தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக உயர்ந்தவர் ஹிப்ஹாப் ஆதி. தற்போது அவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அன்பறிவு’. ஹிப்ஹாப் ஆதி முதன்முறையாக இத்திரைப்படத்தில் இரட்டைவேடங்களில் நடிக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் பெயரில் டி.ஜி தியாகராஜன் தயாரிக்கும் இத்திரைப்படத்தை, அறிமுக இயக்குநரான அஸ்வின் ராம் இயக்குகிறார். சிறிய இடைவெளிக்குப் பிறகு, நடிகர் நெப்போலியன் இத்திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ்த் திரைப்படங்களில் தோன்றுகிறார்.

தெலுங்கு திரையுலகிலிருந்து காஷ்மீரா என்ற கதாநாயகி இத்திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகவுள்ளார். ஆரம்பத்தில், இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இத்திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த ஆண்டு பொங்கல் அன்று இத்திரைப்படம் வெளியாகக்கூடும் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in