அம்பானி மகன் திருமணம்... லண்டனில் ரூ. 592 கோடி மதிப்பிலான ஆடம்பர ஹோட்டலில் நடக்கிறது!

ஸ்டோக் பார்க் எஸ்டேட் ஹோட்டல்
ஸ்டோக் பார்க் எஸ்டேட் ஹோட்டல்

தொழிலதிபர் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்சன்ட் திருமணம் லண்டனில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் திருமணத்திற்காக பாலிவுட் பிரபலங்கள் பலருக்கும் இப்போதே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்சன்ட் திருமணம் எப்படி எங்கு நடக்கப் போகிறது என்பதுதான் பலரின் எதிர்பார்ப்பும். ஏனெனில், திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களே பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. அதனால் திருமணத்தில் என்னென்ன விசேஷங்கள், எங்கு நடக்கிறது என்பது பற்றி தெரிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஜாம்நகரில் மூன்று நாட்கள் பிரம்மாண்டமாக நடந்த ப்ரீ வெட்டிங் கொண்டாட்டத்தில் பலதுறைகளைச் சார்ந்த முக்கிய பிரமுகர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதைவிட இன்னும் பிரம்மாண்டமாக ரூ. 592 கோடி மதிப்பிலான லண்டனில் உள்ள ஸ்டோக் பார்க் எஸ்டேட் ஹோட்டலில் தான் திருமணம் நடக்க இருக்கிறது. கடந்த 2021-ம் ஆண்டில், முகேஷ் அம்பானி லண்டனின் ஸ்டோக் பார்க்கை வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்டோக் பார்க் எஸ்டேட் ஹோட்டல் பல பெருமைகளைக் கொண்டது. அதாவது, 1581-ம் ஆண்டு ராணி எலிசபெத் I-ன் விருப்பமான தங்குமிடமாக இது கருதப்பட்டது. ஜேம்ஸ் பாண்ட் படங்கள், ‘டுமாரோ நெவர் டைஸ்’ போன்ற பல ஹாலிவுட் படங்கள் இங்கு படமாக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாது, லண்டனின் முதல் கன்ட்ரி கிளப் இங்குதான் தொடங்கப்பட்டது. 49 ஆடம்பர படுக்கையறைகள் இங்கு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in