ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சென்ட் திருமணம் வரும் ஜூலை மாதம் நடைபெற இருக்கிறது. இவர்கள் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் பிரபலங்கள் யார் யார் என்பது குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. இவருக்கும் தொழிலதிபர் வீரேன் மெர்ச்சண்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நிச்சயமானது. இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது. ஆனந்த் அம்பானி தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் எரிசக்தி வணிகத்தை வழிநடத்துகிறார். நிச்சயதார்த்தம் நடந்து ஒரு வருடம் கடந்த நிலையில் இவர்களது திருமணம் வரும் ஜூலை 12ம் தேதி நடைபெற உள்ளது. திருமணத்திற்கு இன்னும் நான்கு மாதங்களே இருக்கும் நிலையில், குஜராத்தில் உள்ள ஜாம் நகரில் இப்போதே திருமணக் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது.
திருமணத்தில் கலந்து கொள்வதற்காக முன்னணி தொழிலதிபர்கள், இந்திய அரசியல்வாதிகள், திரைப் பிரபலங்கள் என பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், அவரது முன்னாள் மனைவி மெலிண்டா, குமார் மங்கலம் பிர்லா, கௌதம் அதானி, சஞ்சீவ் கோயங்கா, ரோஷ்னி நாடார், பவன் முன்ஜால், சுனில் மிட்டல் உள்ளிட்ட பல்வேறு தொழிலதிபர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல, திரைப்பிரபலங்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ரஜினிகாந்த், ஷாருக்கான், அமீர்கான், சல்மான் கான், அக்ஷய்குமார், அஜய் தேவ்கன், சைஃப் அலிகான், சங்கி பாண்டே, ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, ரன்பீர் கபூர், ஆலியா பட், விக்கி கௌஷல், கேத்ரீனா கைஃப், மாதுரி தீட்சித், ஆதித்யா சோப்ரா, கரண் ஜோஹர், போனி கபூர், அனில் கபூர் , சித்தார்த் மல்ஹோத்ரா, ஷ்ரத்தா கபூர், கரிஷ்மா கபூர், வருண் தவான் உள்ளிட்டப் பலர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் வாசிக்கலாமே...
பாஜகவில் இணைந்தார் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி!
300 கிலோ எடை, ஆறரை அடி உயரம்... ஜெயலலிதா உருவத்தில் பிரம்மாண்ட கேக்!
முஸ்லிம் திருமணம், விவாகரத்து பதிவுச் சட்டம் ரத்து; விரைவில் அமலுக்கு வருகிறது பொது சிவில் சட்டம்!
திருமணம் செய்ய டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரை கடத்திய தொழிலதிபர்: கூலிப்படையினரும் சிக்கினர்!
காதலனின் கண் முன்னே இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி... 4 சிறுவர்கள் கைது!