நடிகை சீமா தியோ காலமானார்! திரையுலகினர் இரங்கல்!

நடிகை சீமா தியோ
நடிகை சீமா தியோ

பழம்பெரும் இந்தி திரைப்பட நடிகையும், பிரபல இந்தி திரைப்பட இயக்குனரின் தாயாருமான சீமா தியோ இன்று மும்பையில் காலமானார், அவருக்கு வயது 83.

நடிகை சீமா தியோ இந்தி மற்றும் மராத்தி மொழிகளில் 80க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்தி திரையுலக சூப்பர் ஸ்டாரான ராஜேஷ் கண்ணாவுடன் இணைந்து ஆனந்த் என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் அவர் இந்திய அளவில் புகழ்பெற்றார். அதோடு கோஷிஷ், கோர்கா ககாசா என்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

1963ம் ஆண்டு மராத்தி திரைப்பட நடிகரான ரமேஷ் தியோவை திருமணம் செய்து கொண்டார். இவர்களது மூத்த மகன் அஜிங்யா தியோ மராத்தியில் நடிகராகவும், இளைய மகன் அபினை தியோ இந்தி திரைப்பட உலகில் இயக்குனராகவும் உள்ளனர். வயது மூப்பின் காரணமாக அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டிந்த சீமா இன்று காலை உயிரிழந்ததாக அவரது மகன் அபினை தெரிவித்துள்ளார். மேலும், அவரது ஆன்மாக சாந்தியடைய பிரார்த்திக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். அவரது மறைவிற்கு திரைப்பட பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in