
நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டதாக, பிரபல நடிகை அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தி நடிகை அனகா போஸ்லே. சில திரைப்படங்களிலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். ஸ்டார் பிளஸ் சேனலின் ’அனுபமா’ தொடர் மூலம் பிரபலமானவர் அனகா. இவர் நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டதாகவும் இனி நடிப்பை தொடரப் போவதில்லை என்றும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:
சினிமா மற்றும் டிவி தொடர்களில் இருந்து நிரந்தரமாக விடுபடுகிறேன். மத நம்பிக்கை மற்றும் ஆன்மிக பாதையைப் பின்பற்ற இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளேன். நீங்கள் அனைவரும் காட்டிய அன்புக்கும் அக்கறைக்கும் நன்றி.
என்னுடைய இந்த முடிவை மதித்து ஆதரவளிப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆன்மிக பயணத்துக்காக மட்டுமே இந்த முடிவை எடுத்துள்ளேன். எனது இந்த முடிவுக்காக, என்னிடமும் என் குடும்பத்துடனும் நீங்கள் பகிர்ந்துகொண்ட கவலை, ஆதரவு, அன்பு, மரியாதைக்கு நன்றி.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நடிகை அனகாவின் இந்த முடிவு அவர் ரசிகர்களிடம் கவலையை ஏற்படுத்தி உள்ளது. பல சின்னத்திரைக் கலைஞர்கள் அவர் முடிவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.