அரசியல் பயணத்தை உறுதி செய்த தளபதி...விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தொழிற்சங்கம் அமைக்க முடிவு!

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

நடிகர் விஜய் அரசியல் பயணத்தின் அடுத்தபடியாக விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் தொழிற்சங்கம் அமைக்கப்படும் என  அதன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார்.

தமிழ் திரை உலகின் உச்ச நட்சத்திரமாக திகழும் நடிகர் விஜய், அண்மைக்காலமாக அரசியலில் ஈடுபடுவதற்கு ஆயத்தமாக பணிகளை செய்து வருகிறார். அவரது விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் பல்வேறு நலப் பணிகள் செய்து வருவதுடன் அரசியலுக்கு அடிப்படையான பல்வேறு அணிகளும் கட்டமைக்கப்பட்டு வருகின்றன.

விஜய் ரசிகர் மன்றங்கள் பலப்படுத்தப்பட்டு அதன் மாவட்ட தலைவர்கள், செயலாளர்களுடன் விஜய் சந்திப்பு நடத்தப்பட்டது.  விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் இரவு நேர பாடசாலை,  இலவச சட்ட உதவி மையம் ஆகியவை நடைபெற்று வருகின்றன. விஜய் பிறந்தநாள் உள்ளிட்டவைகளின்போது பள்ளி மாணவர்கள் மற்றும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

விஜய் உடன் புஸ்ஸி  ஆனந்த்
விஜய் உடன் புஸ்ஸி ஆனந்த்

சட்டமன்றத் தொகுதி வாரியாக முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் ரொக்கம் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தேசிய மற்றும் அரசியல் தலைவர்களின் பிறந்தநாள் உள்ளிட்டவைகள் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

அமைப்பு ரீதியாக வழக்கறிஞர் அணி, தொழில்நுட்ப அணி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில்  புதிதாக தொழிற்சங்கம் அமைக்கப்படும் என  புஸ்ஸி ஆனந்த் இன்று  அறிவித்துள்ளார். இதன் மூலம் விஜயின் அரசியல் பிரவேசம் விரைவில்  நடைபெறும் என அவரது ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in