திருமணத்திற்கு முன்பு மகளை பான் இந்தியா கதாநாயகி ஆக்கும் ஆக்‌ஷன் ஹீரோ!

நடிகர் அர்ஜூன்
நடிகர் அர்ஜூன்

இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் அர்ஜூன் சினிமா இயக்கத்துக்குத் திரும்பியுள்ளார். இதன் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் துவங்கியது.

இரண்டு வருடங்களுக்குப் பிறகு இயக்கத்திற்குத் திரும்பி இருக்கும் நடிகர் அர்ஜுன், இந்த முறை தனது படத்தை பான் இந்தியா படமாக இயக்குகிறார். இந்தப் படத்திற்கு அவரே கதை,திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். கன்னட சினிமாவில் பிரபல நடிகரான உபேந்திராவின் அண்ணன் மகனான நிரஞ்சன் இந்தப் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக அர்ஜுனின் மகள் நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்கிறார்.

நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன்
நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன்

இவர்கள் தவிர்த்து சத்யராஜ், பிரகாஷ் ராஜ், ஜெயராம் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இவர்களுடன் அர்ஜுனும் இணைந்து நடிக்கிறார். இதன் படப்பிப்பு இன்று முதல் ஹைதராபாத்தில் துவங்கியது. நடிகர்கள் சத்யராஜ் மற்றும் நாயகன் நிரஞ்சன், நாயகி ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்கும் காட்சிகள் பரபரப்பாக படமாக்கப்பட்டு வருகிறது. அடுத்த வருடம் நடிகை ஐஸ்வர்யாவுக்கு நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கும் நிலையில், திருமணத்திற்கு முன்பு தனது மகளை பான் இந்திய நடிகையாக அறிமுகப்படுத்துகிறார் நடிகர் அர்ஜூன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in