பிரபல நடிகரை காதலிக்கிறார் நடிகை எமி ஜாக்சன்

பிரபல நடிகரை காதலிக்கிறார் நடிகை எமி ஜாக்சன்
நடிகை எமி ஜாக்சன்

நடிகை எமி ஜாக்சன், பிரிட்டிஷ் நடிகரை காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்தைச் சேர்ந்த நடிகை எமி ஜாக்சன், விஜய் இயக்கிய மதராசபட்டினம் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். பிறகு அவர் இந்தி, தெலுங்கு, கன்னடப் படங்களிலும் நடித்தார். அவர் கடைசியாக தமிழில், ரஜினிகாந்தின் 2.0 படத்தில் நடித்திருந்தார். இவரும் தொழிலதிபர் ஜார்ஜ் பனயியோட்டும் காதலித்து வந்தனர்.

கடந்த 2019-ம் ஆண்டு நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். கர்ப்பமான எமி ஜாக்சன், ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். குழந்தைக்கு ஆண்ட்ரியாஸ் என்று பெயர் வைத்தனர். குழந்தை பிறந்த பிறகு, திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்கள். கரோனா பரவல் காரணமாகத் திருமணம் தள்ளிப்போனது.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தான் பதிவு செய்திருந்த ஜார்ஜின் புகைப்படங்களை திடீரென நீக்கினார். இதனால் இருவரும் பிரிந்துவிட்டதாகக் கூறப்பட்டது. இதுபற்றி அதிகாரபூர்வ தகவல் இல்லை. இந்நிலையில், பிரபல பிரிட்டிஷ் நடிகர் எட் வெஸ்ட்விக் (Ed Westwick) என்பவரை எமி ஜாக்சன் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

எட் வெஸ்ட்விக், எமி ஜாக்சன்
எட் வெஸ்ட்விக், எமி ஜாக்சன்

கடந்த டிசம்பரில், சவுதி அரேபியாவில் நடந்த சர்வதேசத் திரைப்பட விழாவில் இருவரும் அறிமுகமானார்கள் என்றும் அப்போதிருந்து காதலித்து வருவதாகவும் பிரிட்டிஷ் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

நடிகர் எட் வெஸ்ட்விக், சன் ஆப் சாரோ, ரோமியோ ஜூலியட், பில்லியனர் ரான்சம், த கிராஷ் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். காஸிப் கேர்ள் உட்பட பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

Related Stories

No stories found.