நடிகருடன் காதல்: ரொமான்டிக் போட்டோவுடன் உறுதிப்படுத்திய எமி !

நடிகருடன் காதல்: ரொமான்டிக் போட்டோவுடன் உறுதிப்படுத்திய எமி !

பிரிட்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன், ‘மதராசபட்டினம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அடுத்து, விக்ரமுடன் ‘தாண்டவம்’, ‘ஐ’, தனுஷூடன் ‘தங்கமகன்’, விஜயுடன் ‘தெறி’, ரஜினியுடன் ‘2.0’ போன்ற படங்களில் நடித்தார். பின்னர், ஜார்ஜ் பனயோட்டோ (George Panayiotou) என்ற தொழிலதிபரைக் காதலித்து வந்தார். கடந்த 2019-ல் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். பிறகு அந்த ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஆண்ட்ரியாஸ் என்று பெயர் வைத்தனர்.

கடந்த வருடம் இருவரும் திடீரென பிரிந்தனர். இதை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இருந்து ஜார்ஜின் புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கிவிட்டார் எமி.

இதையடுத்து, பிரிட்டிஷ் நடிகர் எட் வெஸ்ட்விக் (Ed Westwick) என்பவரை எமி ஜாக்சன்காதலித்து வருவதாகக் கூறப்பட்டது. இருவரும் ஜோடியாகப் பல இடங்களில் சுற்றிய புகைப்படங்களும் வெளிநாட்டு பத்திரிகைகளில் வெளியாயின. இருவரும் குவைத்தில் நடந்த திரைப்பட விழாவில் சந்தித்தபோது நட்பு ஏற்பட்டு பின்னர் காதலிக்கத் தொடங்கினர்.

இருவரும் ஜோடியாகச் சுற்றி வரும் புகைப்படங்கள் கசிந்தாலும் தங்கள் காதல் பற்றி இருவரும் ஏதும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் முதன்முறையாக, தனது சமூகவலைதளப் பக்கத்தில் நடிகை எமி ஜாக்சன், எட் வெஸ்ட்விக்குடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் இருவரும் காதலித்து வருவதை அவர் உறுதிப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in