
தனது இன்ஸ்டாகிராம் கணக்கை மர்ம நபர்கள் முடக்கிவிட்டதாக நடிகை அம்ரிதா ஐயர் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளப் பக்கங்களில் நடிகர், நடிகைகள் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் நடிகைகள் தங்கள் புகைப்படங்கள், அடுத்த படம் பற்றிய தகவல்களை பதிவிட்டு வருகின்றனர். நடிகை அம்ரிதா ஐயரும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார்.
இவர், விஜய் யேசுதாஸ் நடித்த ’படைவீரன்’, விஜய் ஆண்டனியின் ’காளி’, விஜய்யின் ’பிகில்’, ’லிஃப்ட்’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது சுந்தர்.சி இயக்கத்தில், ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் நடிக்கும் படத்திலும் நடித்து வருகிறார்.
இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை யாரோ மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளனர். “என் இன்ஸ்டாகிராம் பக்கத்தை யாரோ முடக்கியுள்ளனர். அது மீட்கப்படும் என்று நம்புகிறேன். விரைவில் மிண்டும் வருவேன்” என்று நடிகை அம்ரிதா தெரிவித்துள்ளார்.