கரோனா பாதிப்பு: பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி

அமோல் பலேகர்
அமோல் பலேகர்

பிரபல இந்தி நடிகர் அமோல் பலேகர் கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கரோனா மூன்றாவது அலை இந்தியாவில் படிப்படியாகக் குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 67,084 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இது நேற்றைய பாதிப்பை விடக் குறைவு. இந்த கரோனா தொற்றுக்கு பிரபலங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பிரபல இந்தி நடிகர், அமோல் பலேகருக்கும் (77) இந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் புணேவில் உள்ள தினாநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நடிகர் அமோல் பலேகர், பாரதிராஜாவின் ’16 வயதினிலே’ படத்தின் இந்தி ரீமேக்கான ’சோல்வா சாவான்’ படத்தில் கமல்ஹாசன் கேரக்டரில் நடித்தவர். பாலுமகேந்திரா மலையாளத்தில் இயக்கிய ’ஓலங்கள்’ படத்தில் நாயகனாக நடித்துள்ளார். மராத்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். புகழ்பெற்ற மராத்தி படங்களான, பங்கர்வாடி, அனஹத் உட்பட பல படங்களையும் இவர் இயக்கி இருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in