திருப்பூர் பின்னணியில் உருவாகும் காமெடி படத்தில் அம்மு அபிராமி!

திருப்பூர் பின்னணியில் உருவாகும் காமெடி படத்தில் அம்மு அபிராமி!

பனியன் தொழிலின் பின்னணியில் உருவாகும் காமெடி படத்தில் அம்மு அபிராமி நாயகியாக நடிக்கிறார்.

திருப்பூர் பனியன் தயாரிப்பில், குறிப்பிட்டப் பிரிவில் நடக்கும் சம்பவம் முதன் முறையாக தமிழில் படமாக்கப்படுகிறது. இந்தப் படத்திற்கு "குதூகலம்" என்று பெயரிட்டுள்ளனர். இதை, ரேட் அண்ட் கேட் பிக்சர்ஸ் சார்பில் எம்.சுகின்பாபு தயாரிக்கிறார். இந்தப் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் உலகநாதன் சந்திரசேகரன்.

இவர், இயக்குநர் துரை செந்தில்குமாரிடம் 'காக்கிசட்டை', 'எதிர்நீச்சல்' படங்களில் துணை இயக்குநராகவும், 'கொடி', 'பட்டாஸ்' போன்ற படங்களில் இணை இயக்குநராகவும் பணியாற்றியவர்.

உலகநாதன் சந்திரசேகரன்
உலகநாதன் சந்திரசேகரன்

இளைஞன் ஒருவன், தன் தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்தை நிறைவேற்ற எடுக்கும் முயற்சிகளுக்கு இடையூறாக வரும் தடைகளை, எப்படி எதிர் கொள்கிறான் என்பது படத்தின் கதை. திருப்பூரின் அடையாளமாக விளங்கும் பனியன் தொழிலின் பின்னணியில், நகைச்சுவையுடன் படம் உருவாகிறது.

கதாநாயகனாக பாலமுருகன் அறிமுகமாகிறார். இவர் ஜோடியாக அம்மு அபிராமி நடிக்கிறார். கவிதாபாரதி, புகழ், பியான், சஞ்சீவி, 'நக்கலைட்' அனிஸ், மன்மோகித், பிரேமி, எம்.சுகின்பாபு முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். பெரும்பாலான காட்சிகள் திருப்பூரில் படமாக்கப்படுகிறது. பியான் சர்ராவ் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு சுகுமாரின் உதவியாளர், மணிபெருமாள் ஒளிப்பதிவு செய்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in