நடிகர் அமிதாப் பச்சனுக்கு 2-வது முறையாக கரோனா பாதிப்பு!

நடிகர் அமிதாப் பச்சனுக்கு 2-வது முறையாக கரோனா பாதிப்பு!

இந்தி நடிகர் அமிதாப் பச்சனுக்கு மீண்டும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய சினிமாவின் மூத்த நடிகர் அமிதாப் பச்சன். 79 வயதான இவர், இப்போதும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். ரன்பீர் கபூர், ஆலியா பட் ஆகியோருடன் அவர் நடித்துள்ள 'பிரம்மாஸ்திரா' செப்டம்பர் 9-ம் தேதி வெளியாகிறது. அதற்கான புரமோஷன் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், அமிதாப் பச்சனுக்கு இரண்டாவது முறையாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை ட்விட்டரில் அமிதாப்பச்சன் உறுதி செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ’எனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்துகொள்ளவும்’ என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதத்திலும் அமிதாப் பச்சன் மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in