ரூ.23 கோடிக்கு பங்களாவை விற்ற அமிதாப் பச்சன்!

ரூ.23 கோடிக்கு பங்களாவை விற்ற அமிதாப் பச்சன்!

நடிகர் அமிதாப் பச்சன், டெல்லியில் உள்ள தனது பங்களாவை ரூ.23 கோடிக்கு விற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், மும்பையில் வசித்து வருகிறார். அங்குள்ள ஜூஹூ பகுதியில், அவருக்கு ஜனக், ஜல்சா, பிரதிக்‌ஷா, வத்சா மற்றும் அம்மு ஆகிய பிரம்மாண்ட பங்களாக்கள் உள்ளன. அவர் பெற்றோர் தேஜி பச்சன், ஹரிவன்ஷ் ராய் பச்சன் ஆகியோர் தெற்கு டெல்லியில் குல்மோகர் பார்க் பகுதியில் தங்களுக்கு சொந்தமான சோபான் என்ற பங்களாவில் வசித்து வந்தனர்.

அமிதாப் பச்சனின் டெல்லி பங்களா
அமிதாப் பச்சனின் டெல்லி பங்களா

அமிதாப் பச்சன், சினிமாவுக்காக மும்பை செல்வதற்கு முன் பெற்றோருடன் இங்குதான் வசித்து வந்தார். அவர் பெற்றோரின் மறைவுக்குப் பிறகு, இந்த பங்களாவை வாடகைக்கு விட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், 2 மாடி கொண்ட இந்த பங்களாவை நடிகர் அமிதாப் பச்சன், 23 கோடி ரூபாய்க்கு இப்போது விற்றுள்ளார். நேஸோன் (Nezone) குழும நிறுவனங்களின் சிஇஓ அவ்னி பதேர் பங்களாவை வாங்கி இருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in