’ராதே ஷ்யாம்’ படத்துக்கு வாய்ஸ் கொடுத்த அமிதாப்!

ராதே ஷ்யாம் - பூஜா ஹெக்டே, பிரபாஸ்
ராதே ஷ்யாம் - பூஜா ஹெக்டே, பிரபாஸ்

பிரபாஸ் நடிக்கும் ’ராதே ஷ்யாம்’ படத்துக்கு, நடிகர் அமிதாப்பச்சன் வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார்.

’பாகுபலி’ பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள, பான் இந்தியா திரைப்படம் ’ராதே ஷியாம்’. பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். பிரபாஸ், விக்ரம் ஆதித்யா என்ற கைரேகை நிபுணராகவும் டாக்டர் பிரேர்னா எனும் கேரக்டரில் பூஜா ஹெக்டேவும் நடித்துள்ளனர். இந்தி நடிகை பாக்கியஸ்ரீ, சச்சின் கெடேக்கர், ஜெகபதி பாபு, பிரியதர்ஷினி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ராதே ஷ்யாம்- பூஜா ஹெக்டே, பிரபாஸ்
ராதே ஷ்யாம்- பூஜா ஹெக்டே, பிரபாஸ்

ராதா கிருஷ்ணகுமார் இயக்கியுள்ள இந்தப் படத்தை, யுவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். பின்னணி இசையை தமன் அமைத்துள்ளார். படத்தின் தமிழ் வசனங்களையும் பாடல்களையும் மதன் கார்க்கி எழுதியுள்ளார்.

அமிதாப்பச்சன்
அமிதாப்பச்சன்

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் மார்ச் 11-ம் தேதி படம் வெளியாகிறது. தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் வெளியிடுகிறது. பீரியட் படமான இது ஐரோப்பிய பின்னணியில் நடக்கும் காதல் கதையைக் கொண்டது.

இந்தப் படத்துக்கு இப்போது, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார். படத்தின் தொடக்கத்தில் கதைப் பற்றி அவர் விவரிப்பார் என்று கூறப்படுகிறது. இந்தி பேசும் மாநிலங்களில் படத்துக்கு ரசிகர்களை இழுக்க அமிதாப் குரல் உதவும் என்று கூறப்படுகிறது.

அமிதாப்பச்சனும் பிரபாஸும் இப்போது நாக் அஸ்வின் இயக்கும் படத்தில் நடித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in