பிரபல ஹாலிவுட் நடிகர் மரணம்

பிரபல ஹாலிவுட் நடிகர் மரணம்

பிரபல ஹாலிவுட் நடிகர் போ ஹாப்கின்ஸ் (Bo Hopkins). ‘அமெரிக்கன் கிராஃபிட்டி’, ‘தி கேட் வே’, ‘மிட்நைட் எக்ஸ்பிரஸ்’, ‘தி கில்லர் எலைட்’, ‘மிட்நைட் எக்ஸ்பிரஸ்’ உட்பட சுமார் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்திருக்கிறார். கடைசியாக கடந்த 2020-ல் வெளியான ’ஹில்பில்லி எலிஜி’ என்ற படத்தில் நடித்திருந்தார். கடந்த சில நாட்களாக உடல் நலமில்லாமல் இருந்த, போ ஹாப்கின்ஸ் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 80.

இதுகுறித்து அவருடைய அதிகாரபூர்வ இணையதளத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘போ ஹாப்கின்ஸ் மறைந்துவிட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த சில வருடங்களாக ரசிகர்களின் ஒவ்வொரு மெயிலுக்கும் பதிலளிக்க முடியவில்லை என்றாலும் அவர் உங்கள் ஒவ்வொருவரையும் பாராட்டினார்’ என்று அவருடைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

போ ஹாப்கின்ஸ் மறைவை அடுத்து ரசிகர்கள், ஹாலிவுட் நடிகர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றியவர் இவர். தனது 16 வயதில் ராணுவத்தில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in