’ராதே ஷ்யாம்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

’ராதே ஷ்யாம்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
ராதே ஷ்யாம் - பிரபாஸ், பூஜா ஹெக்டே

பிரபாஸ் நடித்த ராதே ஷ்யாம் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை அமேசான் பிரைம் அறிவித்துள்ளது.

ராதா கிருஷ்ணா குமார் இயக்கத்தில், யுவி கிரியேஷன்ஸ் தயாரித்த படம், ராதே ஷ்யாம். இதில் பிரபாஸ், பூஜா ஹெக்டே , சச்சின் கெடேகர், பிரியதர்சி புலிகொண்டா, பாக்யஸ்ரீ, ஜெகபதி பாபு, முரளி ஷர்மா, குணால் ராய் கபூர், ரித்தி குமார், சாஷா செத்ரி, சத்யன் உட்பட பலர் நடித்துள்ளனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஜஸ்டின் பிரபாகர், தமன் இசை அமைத்திருந்தனர்.

ராதே ஷ்யாம் - பிரபாஸ், பூஜா ஹெக்டே
ராதே ஷ்யாம் - பிரபாஸ், பூஜா ஹெக்டே

இந்தப் படம் கடந்த 11-ம் தேதி, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் வெளியானது. காதல் கதையை கொண்ட இந்தப் படம் இப்போது ஓடிடியில் வெளியாக இருக்கிறது.

இதன் டிஜிட்டல் உரிமையை பெற்றுள்ள, அமேசான் பிரைம் நிறுவனம் ஏப்ரல் 1-ம் தேதி இந்தப் படத்தை தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியிடுகிறது.

’’டிஜிட்டல் வெளியீட்டின் மூலம் இந்தக் காதலை உங்களிடம் கொண்டு வருவதில் மகிழ்ச்சியடைகிறேன். உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களிடமிருந்து அன்பையும் ஆதரவையும் தொடர்ந்து பெறுவதை எதிர்பார்க்கிறேன்” என்கிறார் பிரபாஸ்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in