`இது முதல் படம் என பார்த்திபன் சொல்வது பொய்'- `இரவின் நிழல்’ குறித்து அமேசான் சர்ச்சை விளக்கம்!

`இது முதல் படம் என பார்த்திபன் சொல்வது பொய்'- `இரவின் நிழல்’ குறித்து அமேசான் சர்ச்சை விளக்கம்!

நடிகர் பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ படம் குறித்து அமேசான் கொடுத்துள்ள விளக்கம் இணையத்தில் விவாதங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

நடிகர் பார்த்திபனின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தில் கடந்த ஜூலை மாதம் வெளியானத் திரைப்படம் ‘இரவின் நிழல்’. உலகிலேயே முதன் முறையாக சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட நான் லீனியர் திரைப்படம் என்று சொல்லி இந்தப் படத்தை வெளியிட்டார் பார்த்திபன். அந்த சமயத்திலேயே முதல் நான் லீனியர் திரைப்படமா என்பது குறித்தான விவாதம் வந்தது.

படம் வெளியாகி கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் கழித்து தற்போது அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பே நடிகர் பார்த்திபன் பார்வையாளர்கள் போலவே, தானும் இந்தப் படம் ஓடிடியில் வெளியாவதற்குக் காத்திருப்பதாகச் சொன்னார். இந்த நிலையில் இன்று தனக்கேத் தெரியாமல் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி இருப்பதாகவும், படத்திற்கான நேரத்தை ஒதுக்கி பார்வையாளர்களும் பார்க்கும்படியும் தன்னுடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்த நிலையில், அமேசான் ஓடிடி தளம் ’இரவின் நிழல்’ குறித்தான விளக்கத்தில், ‘இந்தப் படம் உலகத்திலேயே சிங்கிள் ஷாட்டில் நான் லீனியர் முறையில் எடுக்கப்பட்ட இரண்டாவது படமாகும். ஆனால், இந்தப் படத்தின் இயக்குநர் இதை முதல் படம் என்ற பொய்யானத் தகவலை பரப்பி வருகிறார்’ என்று பதிவிட்டிருப்பது இணையவாசிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து நடிகர் பார்த்திபனை டேக் செய்து பகிர்ந்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in