`உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருக்கிறேனா?’- ஸ்ருதி ஹாசன் விளக்கம்!

`உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருக்கிறேனா?’- ஸ்ருதி ஹாசன் விளக்கம்!

தன் உடல் நிலை பற்றி தவறாக பரவி வரும் செய்திகளுக்கு நடிகை ஸ்ருதி ஹாசன் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை ஸ்ருதி ஹாசன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம்மில் கடுமையான உடற்பயிற்சிகள் செய்வது போன்ற ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தார். அதில், தான் கடுமையான பிசிஓஎஸ் பிரச்சினைகளையும் வளர்சிதை மாற்றங்களையும் சந்தித்து வருவதாகவும், ஆனால் அந்த சவால்களை ஏற்றுக்கொண்டு முறையான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு, சரியான நேரத்திற்கு தூக்கம் என தற்போது ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.

ஆனால், இதை சில ஊடகங்கள் திரித்து செய்திகளாக வெளியிட அது குறித்து அவர் தற்போது விளக்கம் கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இப்பொழுது நான் ஹைதராபாத்தில் மகிழ்ச்சியாக படப்பிடிப்பில் இருக்கிறேன். பல பெண்களைபோல நானும் பிசிஓஎஸ்ஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறேன் என நான் என் உடற்பயிற்சி வீடியோவை முன்பு பகிர்ந்திருந்தேன். இது சவாலானது தான். ஆனால், இதனால் நான் பாதிக்கப்பட்டு உடல்நல குறைவாக இருக்கிறேன் என்பது அர்த்தமல்ல. சில ஊடகங்கள் என்னுடைய பதிவை சரியாக படிக்காமல் நான் நலமில்லை எனவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறேன் எனவும் செய்திகள் வெளியிட்டுள்ளன. அது முற்றிலும் பொய்.

அந்த பதிவு உடலில் பிரச்சினைகள் இருந்தாலும் பாசிட்டிவாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் போட்டிருந்தேன். ஒரு வருடத்திற்கும் மேலாக பிசிஓஎஸ் பிரச்சினை இருக்கிறது. ஆனாலும் நான் நலமாகவே உள்ளேன். உங்கள் அக்கறைக்கு நன்றி!’ என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in