நடிப்பில் இருந்து ஓய்வு பெறுகிறேனா?: ரசிகருக்கு ஷாருக்கான் கொடுத்த ஷாக் பதில்

ஷாருக்கான்
ஷாருக்கான்நடிப்பில் இருந்து ஓய்வு பெறுகிறேனா?: ரசிகருக்கு ஷாருக்கான் கொடுத்த ஷாக் பதில்

நடிப்பில் இருந்து ஓய்வு பெறுகிறீர்களா என்ற ரீதியில் கேள்வி கேட்ட ரசிகருக்கு நடிகர் ஷாருக்கான் பதிலளித்துள்ளார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ஷாருக்கான். அவர் மகன் ஆர்யன்கான் சமீபத்தில் போதைப் பொருள் வழக்கில் சிறை சென்று ஜாமீனில் வெளிவந்தார். இந்தப் பிரச்சினைகள் காரணமாகவும், சில தனிப்பட்ட காரணங்களுக்காகவும் ஷாருக்கான் சில வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்தார்.

இந்த நிலையில், கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்குப் பிறகு ஷாருக்கான், தீபிகா படுகோன் நடிப்பில் ‘பதான்’ திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், அவர் அட்லி இயக்கத்தில் ‘ஜவான்’ நடித்து வருகிறார். ட்விட்டரில் அடிக்கடி ரசிகர்களுடன் கலந்துரையாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் ஷாருக்.

அந்த வகையில், சமீபத்தில் ரசிகர் ஒருவர் ஷாருக்கானிடம், ’நீங்கள் சிறந்தவர்தான். ஆனாலும், நீங்கள் ஓய்வு பெற்றால் உங்களுக்கு அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என நினைக்கிறீர்கள்?’ என கேட்டுள்ளார்.

அதற்கு ஷாருக்கான், ‘நான் எப்போதும் நடிப்பில் இருந்து ஓய்வு பெறமாட்டேன். அப்படி ஒருவேளை என்னை வீழ்த்த நினைத்தால் முன்பை விடவும் அதிரடியாக திரும்ப வருவேன்’ என பதில் அளித்துள்ளார். ஷாருக்கானின் இந்த பதில் ரசிகர்களை உற்சாகமடைய செய்ததுடன், சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in