கர்ப்பமாக இருக்கிறேனா?- நிக்கி கல்ராணி விளக்கம்!

நடிகர் ஆதி, நடிகை நிக்கி கல்ராணி
நடிகர் ஆதி, நடிகை நிக்கி கல்ராணி

நடிகை நிக்கி கல்ராணி தான் கர்ப்பமாக இருக்கிறேனா என்பது குறித்து பேசியிருக்கிறார்.

’மிருகம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானவர் நடிகர் ஆதி. இவருக்கும் நடிகை நிக்கி கல்ராணிக்கும் காதல் திருமணம் இந்த வருடம் மே மாதம் நடந்தது. இதனை அடுத்து நிக்கி கல்ராணி கர்ப்பமாக இருக்கிறார் என தகவல் வெளியானது.

இது குறித்து நிக்கி கல்ராணி விளக்கம் கொடுத்திருக்கிறார். “இந்த மிகப்பெரிய தகவல் பற்றி எனக்கேத் தெரியாது. இந்தத் தகவலை எனக்குப் பதிலாக தெரிவித்திருப்பவர்கள் எங்களின் ட்யூ தேதியையும் தெரிவித்து விடுபவது நல்லது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால், நான் கர்ப்பமாக இல்லை.

நடிகை நிக்கி கல்ராணி
நடிகை நிக்கி கல்ராணிhindu

இதுபோன்ற நல்ல செய்திகளை வெளியில் சொல்வது முதலில் நானாகதான் இருக்கும். அதனால், இதுபோன்ற வதந்திகளை யாரும் பரப்பாதீர்கள். உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பு வேண்டுகோள்” என்று பதிவு செய்திருக்கிறார் நிக்கி கல்ராணி.

’யாகாவரா நாகாக்க’, ‘மரகதநாணயம்’ ஆகிய படங்களில் இருவரும் ஒன்றாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in