`பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு போகிறேனா?- தெறிக்கவிடும் மன்சூர் அலிகானின் விளக்கம்!

மன்சூர் அலிகான்
மன்சூர் அலிகான்

நடிகர் மன்சூர் அலிகான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போவது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. பிரபலங்கள், பொதுமக்கள் என கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஆரம்பித்து 15 நாட்களுக்கும் மேலாகிவிட்ட நிலையில், நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து வெளியேறினார்.

சாந்தி மாஸ்டர் முதல் வாரத்தில் குறைந்த மக்கள் வாக்குகள் அடிப்படையில் வெளியேற்றப்பட்டார். இதனால், நடிகர் மன்சூர் அலிகான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக உள்ளே வருவார் எனவும் அதற்கான பேச்சுவார்த்தை அவரிடம் தீவிரமாக நடக்கிறது எனவும் தகவல் வெளியானது.

இதனை அடுத்து, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போவது குறித்து மன்சூர் அலிகான் பேசியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது, ‘பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்துக் கொள்ள மாட்டேன். அப்படி கலந்துக் கொள்வதாக இருந்தால், 'நான் தான் பிக்பாஸாக இருப்பேன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூத்தடிப்பது எனக்கு பிடிக்கவில்லை. நான் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக இருந்தால், விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிகழ்ச்சியாக, நான் பிக்பாஸாக இருந்து நடத்துவேன்’ என தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in