நான் கொலைக்காரனா? கொள்ளைக்காரனா? - ரசிகர்களை கலாய்க்கும் அஜித்தின் வைரல் வீடியோ

நான் கொலைக்காரனா? கொள்ளைக்காரனா? - ரசிகர்களை கலாய்க்கும் அஜித்தின் வைரல் வீடியோ

பைக் சுற்றுப்பயணத்தில் உள்ள அஜித்குமார், தன்னை தேடிவந்த ரசிகர்களிடம், “நான் கொலைக்காரனா? கொள்ளைக்காரனா?” என்று விளையாட்டாக பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித்குமார் தற்போது இமயமலையின் கார்கில், ஜம்மு, லடாக், மணாலி, கேதார்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட பகுதிகளில் பைக்கில் வலம் வந்துகொண்டுள்ளார். அஜித் பைக் பயணம் செய்யும் சாலை மேப்பையும் அவரின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் அவ்வப்போது வெளிவந்து வைரலாகி வருகின்றன. இவரின் பைக் பயணத்தில் நடிகை மஞ்சு வாரியரும் இணைந்துள்ளார். வழியில் கோயில்கள், உணவகங்களில் அஜித் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களும் வெளியாகி வருகின்றனர்.

இமயமலைக்கே சென்றாலும் விடாமல் சென்று அஜித்தை சந்தித்து ஆச்சர்யப்படுத்துகின்றனர் ரசிகர்கள். தற்போது புதிதாக வைரலாகிவரும் வீடியோவில், அஜித்தைத் தேடி ரசிகர்கள் வருகிறார்கள். அப்போது, "சார் உங்களை தேடித் தான் மூன்று நாள்களாக அலைகிறோம்" என அவர்கள் சொல்ல, அதற்கு "நான் என்ன கொலைக்காரனா, கொள்ளைக்காரனா?, என்னைத் தேடுகிறீர்கள்" என்று நகைச்சுவையாக கேட்டு ரசிகர்களை சிரிக்க வைக்கிறார். பின்பு ரசிகர்களிடம் அஜித் சகஜமாக பேசும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோதான் இப்போது சமூக ஊடகங்களில் படு வைரலாகி உள்ளது.

அஜித்குமார் இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத ‘ஏகே 61’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை போனிகபூர் தயாரித்து வருகிறார். அஜித் - வினோத் - போனிகபூர் கூட்டணியில் ஏற்கெனவே ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ ஆகிய படங்கள் வெளியாகியுள்ளது. ‘ஏகே 61’ படத்தில் நடிகை மஞ்சு வாரியரும் நடிக்கிறார். சென்னை, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு பாங்காங்கில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இடைவெளியில்தான் அஜித் இமயமலை பகுதிகளில் ஜாலியாக பைக் ட்ரிப் சென்றுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in