`புஷ்பா’ அல்லு அர்ஜுனின் காப்பியா நான்?- நானி விளக்கம்!

அல்லு அர்ஜுன் &  நானி
அல்லு அர்ஜுன் & நானி`புஷ்பா’ அல்லு அர்ஜுனின் காப்பியா நான்?- நானி விளக்கம்!

‘தசரா’ திரைப்படத்தில் நானியின் தோற்றம் புஷ்பா’ அல்லு அர்ஜூனின் காப்பியா என எழுந்த கேள்விக்கு அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.

நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘தசரா’ திரைப்படம் இந்த மாதம் இறுதியில் வெளியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி எனப் பான் இந்தியா படமாக இந்தப் படம் வெளியாக இருக்கும் நிலையில் இதற்கான புரோமோஷன் பணிகளில் நானி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். படம் தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர் எழுப்பியுள்ள கேள்விக்கு ஒன்றிற்கும் பதில் அளித்துள்ளார் நானி. ‘தசரா’ படத்தில் நானியின் தோற்றம் பார்ப்பதற்கு ‘புஷ்பா’ படத்தில் அல்லுஅர்ஜூன் போல உள்ளதே எனக் கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்துள்ள நானி, ‘’புஷ்பா’ அல்லு அர்ஜூனின் தோற்றம் போல ’தசரா’ படத்தில் என்னுடைய தோற்றம் இருக்கலாம். ஆனால், உண்மையில் படம் பார்க்கும்போது எப்படி வேறுபட்டிருக்கிறது என்பது உங்களுக்குப் புரிய வரும். படம் வெளியான பிறகு இது ‘தசரா’ நானி லுக் எனப் பேசுவீர்கள்’ என கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in