
கடந்த 2021 ஆம் ஆண்டுக்கான 69வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்ட நிலையில் சிறந்த நடிகருக்கான விருதினை ’’புஷ்பா’’ படத்திற்காக அல்லு அர்ஜுன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
2021 ஆம் ஆண்டிற்கான தேசிய விருதிகள் இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் ட்விட்டரில் காலை முதலே தங்களுக்கு பிடித்த படங்கள், நடிகர்கள் என தெறிக்கவிட்ட நிலையில், அதிகப்படியான ரசிகர்கள் அல்லு அர்ஜுனை டேக் செய்திருந்தார்கள்.
இந்த நிலையில் புஷ்பா படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது அல்லுஅர்ஜுனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தெலுங்கு திரையுலகத்தின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன். இவர் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான திரைப்படம் புஷ்பா. இந்த படம் தெலுங்கில் மட்டுமின்றி தமிழ், மலையாளம், இந்தி, கன்னடத்திலும் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் அவரது நடிப்பு அனைவரது பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.