ரூ.125 கோடி சம்பளம்: பிரபாஸை பின்தள்ளிய அல்லு அர்ஜூன்

பிரபாஸ் - அல்லு அர்ஜூன்
பிரபாஸ் - அல்லு அர்ஜூன்

சம்பள அடிப்படையில் தெலுங்கின் உச்ச நடிகராக உயர்ந்திருக்கிறார் ’புஷ்பா’ நாயகனான அல்லு அர்ஜூன்.

புஷ்பா திரைப்படத்தின் வாயிலாக பான் இந்தியா நடிகராக உயர்ந்திருக்கிறார் அல்லு அர்ஜூன். தெலுங்கு நடிகர்களில் ஒருவர் என்றளவில் இருந்த அல்லு அர்ஜூனின் மார்க்கெட் மதிப்பு தற்போது எகிறியிருக்கிறது. புதிய திரைப்பட ஒப்பந்தத்தில் அவர் பெற்றிருக்கும் ஊதியம் இதனை உறுதி செய்திருக்கிறது.

பூஷன் குமாரின் டி சீரிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அல்லு அர்ஜூன் பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கும் புதிய திரைப்படத்துக்காக ரூ.125 கோடிக்கு ஒப்பந்தமாகி இருக்கிறாராம். இது தெலுங்கு நடிகர்கள் மத்தியில் புதிய உச்ச ஊதியமாகும். முன்னதாக ரூ.100 கோடியுடன் பாகுபலி நாயகன் பிரபாஸ் முதலிடத்தில் இருந்தார்.

அதற்கடுத்த இடத்தில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் நடித்ததற்காக, ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் வருகின்றனர். ஆர்ஆர்ஆர் திரைப்படத்துக்கு ஆஸ்கர் விருது சாத்தியமானால், இந்த இருவரின் ஊதியமும் பிரபாஸுக்கு இணையாக எகிறக்கூடும்.

அல்லு அர்ஜூன் தற்போது புஷ்பா திரைப்படத்தின் அடுத்த பாகத்தில் தீவிரமாக இருக்கிறார். பாலிவுட்டில் இவர் அறிமுகமாகும் புதிய திரைப்படத்தை ‘அர்ஜூன் ரெட்டி’ இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in