புனித் ராஜ்குமார் வீட்டுக்குச் சென்ற அல்லு அர்ஜுன்

புனித் ராஜ்குமார் வீட்டுக்குச் சென்ற அல்லு அர்ஜுன்
அல்லு அர்ஜுன்

மறந்த நடிகர் புனித் ராஜ்குமார் வீட்டுக்குச் சென்ற நடிகர் அல்லு அர்ஜுன், அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார். இவர், கடந்த வருடம் அக்டோபர் 29-ம் தேதி உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். புனித் ராஜ்குமாரின் மறைவு திரையுலகினர் மத்தியிலும் கன்னட ரசிகர்கள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் மறைவுக்கு பிரதமர் மோடி, அமைச்சர்கள் உட்பட பலர் இரங்கல் தெரிவித்தனர்.

புனித் மறைவை அடுத்து மற்ற மொழி நடிகர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அவர் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினர். நடிகர் சூர்யா, சிவகார்த்திகேயன் ஆகியோர் அவர் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினர்.

சிவராஜ்குமாருடன் அல்லு அர்ஜுன்
சிவராஜ்குமாருடன் அல்லு அர்ஜுன்

இந்நிலையில், பிரபல தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுன், புனித் ராஜ்குமார் வீட்டுக்குச் சென்று அவர் புகைப்படத்துக்கு மரியாதை செலுத்தினார். பின்னர், புனித்தின் சகோதரர் நடிகர் சிவராஜ்குமார், அவர் மனைவி உட்பட குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

முன்னதாக, ’புஷ்பா’ ப்ரொமோஷன் நிகழ்ச்சிக்காக, அல்லு அர்ஜுன் பெங்களூரு சென்றிருந்தபோது, “சகோதரர் புனித் ராஜ்குமாருக்கு நேர்ந்தது, துரதிர்ஷ்டவசமானது. புஷ்பா படத்தின் ப்ரொமோஷன் நேரத்தில் அவர் வீட்டுக்கு நான் செல்வது சரியாக இருக்காது. பட ரிலீஸுக்குப் பிறகு அவர் வீட்டுக்குச் செல்வேன்” என்று கூறியிருந்தார். அதன்படி இப்போது அவர் அங்கு சென்றுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in