பயில்வான் ரங்கநாதனுக்கு எதிராக ஆல்யா மானசா ஆவேசம்!

பயில்வான் ரங்கநாதனுக்கு எதிராக ஆல்யா மானசா ஆவேசம்!
ஆல்யா மானசா

“நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி மட்டும் ஏன் பொதுவெளியில் பெரிதுபடுத்திப் பேச வேண்டும்?” என பயில்வான் ரங்கநாதனுக்கு எதிராக சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா ஆவேசம் காட்டி இருக்கிறார்.

சின்னத்திரை நடிகையான ஆல்யா மானசா, இரண்டாவது குழந்தைக்குத் தாயாகி ஓய்வில் இருந்ததால் சீரியல்களில் நடிக்காமல் இருந்தார். இப்போது மீண்டும் பழையபடி சமூகவலைதளங்களில் விளம்பரம், கடை திறப்பு நிகழ்ச்சிகளுக்கு செல்வது என பிஸியாகி இருக்கிறார் ஆல்யா. இந்த நிலையில் தான், பயில்வான் ரங்கநாதனுக்கு எதிராக நேற்றைய நிகழ்வு ஒன்றில் பத்திரிகையாளர்களிடம் பொங்கி இருக்கிறார் ஆல்யா.

பயில்வான் ரங்கநாதன் தனது யூடியூப் சேனலில் பின்னணி பாடகி சுசித்ராவின் முன்னாள் திருமண வாழ்க்கை பற்றியும் இப்போது அவரது வாழ்க்கை பற்றியும் சர்ச்சையான விதத்தில் பேசி இருந்தார். இதையடுத்து அவரை போனில் தொடர்பு கொண்ட சுசித்ரா, “இது போன்ற ஆதாரமற்ற அவதூறுப் பேச்சுகளை பேச வேண்டிய அவசியம் என்ன?” என கேள்வி எழுப்பினார். அது தொடர்பான தொலைபேசி உரையாடல் குறித்த ஆடியோவையும் வெளியிட்டார் சுசித்ரா. இந்த சம்பவம் குறித்து தான் ஆல்யா மானசா இப்போது பேசியிருக்கிறார்.

நேற்றைய நிகழ்ச்சி ஒன்றில் பத்திரிகையாளர்களிடம் பேசிய ஆல்யா சொன்னது இதுதான்: “இது போன்ற சம்பவங்களால் நான் நேரடியாக பாதிக்கப்படவில்லை தான். இருந்தாலும், இந்த மாதிரியான வீடியோக்களை நான் பார்க்க நேர்கையில் அதில் பேசு பொருளாக இருக்கும் நடிகர்களுக்காக வருந்துகிறேன். எல்லோருக்குமே தனிப்பட்ட வாழ்க்கை என்ற ஒன்று இருக்கிறது. சரி தவறு என்பதைத் தாண்டி அவர்களுடைய விருப்பப்படி வாழ்வது அவர்களது உரிமை; அதில் நாம் தலையிட முடியாது.

சினிமா துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலுமே இதுபோன்ற தனிப்பட்ட உறவுகள் இருக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அப்படி இருக்கும் போது, நடிகர்களது விஷயத்தை மட்டும் ஏன் இவ்வளவு பெரிதுபடுத்தி பொது வெளியில் பேச வேண்டும்?” பயில்வானுக்கு எதிராக இப்படி கேள்வி எழுப்பி இருக்கிறார் ஆல்யா.

ஆர்.ஜே.வாக ஊடகத் துறையில் அடிவைத்த சுசித்ரா, பின்பு பின்னணி பாடகி ஆனார். பாடகர் கார்த்திக்கை கடந்த 2017-ல் திருமணம் செய்து கொண்டார். ஆனால், இருவரும் விரைவில் பிரிந்தனர். அந்த மன அழுத்தத்தில் இருந்தவரது சமூக வலைதள கணக்குகளை யாரோ முடக்க, ‘சுசி லீக்ஸ்’ என்ற பெயரில் பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் அவரது கணக்கில் இருந்து வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in