அன்னையாகும் ஆலியா... ஸ்கேன் படத்தைப் பகிர்ந்து ஸ்வீட் செய்தி!

அன்னையாகும் ஆலியா... ஸ்கேன் படத்தைப் பகிர்ந்து ஸ்வீட் செய்தி!

பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான ஆலியா பட், ரண்பீர் கபூர் இருவருக்கும் மும்பையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் பிரம்மாண்டமாக திருமணம் நடந்தது. சிறு வயதிலிருந்தே ரண்பீர் மீது ‘க்ரஷ்’ உள்ளதாகத் தெரிவித்திருந்த ஆலியா, பின்பு அவரையே காதலித்து திருமணம் செய்துகொண்டது இருவரின் ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தது.

இருவரும் காதலிக்கும் தகவல், 2018-ம் வருடத்திலிருந்தே வெளியே தெரிய ஆரம்பித்திருந்த நிலையில், 2019-ல் இவர்கள் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்போது ரண்பீரின் தந்தையும் பாலிவுட் ஜாம்பவானுமான ரிஷி கபூர் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை மேற்கொண்டு வந்ததால் இவர்களின் திருமணம் தள்ளிப்போனது.

மீண்டும் 2020-ல் திருமணம் அறிவிக்கப்பட்டு பின்பு கரோனா பொதுமுடக்கம் போன்ற காரணங்களால் தள்ளிப்போனது. ஏப்ரல் மாதத்தில் நெருங்கிய பாலிவுட் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்துகொள்ள இவர்கள் திருமணம் கோலாகலமாக நடந்தேறியது. பல வருடங்களாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுயவிவரத் தகவல்களை மாற்றாமல் இருந்த ஆலியா, திருமணத்திற்குப் பின்பு 'Currently Dreaming' என மாற்றினார்.

இந்நிலையில், ஆலியா- ரண்பீர் தம்பதி பெற்றோர் ஆகப்போகும் விஷயத்தை தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். ஆலியா மருத்துவமனையில் ஸ்கேன் பார்த்து அதில் தெரியும் குழந்தையின் புகைப்படத்தைப் பகிர்ந்து, 'எங்கள் குழந்தை சீக்கிரம் வர இருக்கிறது' என ரண்பீருடன் இருக்கும் புகைப்படத்தை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

திருமணம் ஆன இரண்டு மாதங்களில் இந்த மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துள்ள இந்த பாலிவுட் நட்சத்திரத் தம்பதிக்கு சோனு சூட், கரண் ஜோஹர், பிரியங்கா சோப்ரா, வாணி கபூர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பல திரையுலகப் பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in