ஹாலிவுட் படத்தில் ஆலியா பட்

ஹாலிவுட் படத்தில் ஆலியா பட்

நடிகை ஆலியா பட், ஹாலிவுட் படத்தில் ஒப்பந்தமாகி இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

பிரபல இந்தித் திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான மகேஷ் பட்டின் மகள் ஆலியா பட். கடந்த 2012 ஆம் ஆண்டு ’ஸ்டூடண்ட் ஆப் த இயர்’ என்ற இந்திப் படம் மூலம் நடிகையாக அறிமுகமான இவர், 2 ஸ்டேட்ஸ், உட்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, கல்லி பாய், கங்குபாய் கதியாவாடி உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

ராஜமவுலியின் ’ஆர் ஆர் ஆர்’ படத்திலும் நடித்துள்ள, ஆலியா பட் இப்போது ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். நெட்பிளிக்ஸ் தயாரிக்கும் ’ஹார்ட் ஆஃப் ஸ்டோன்’ என்ற படத்தில் அவர் நடிக்கிறார். இதை, டாம் ஹார்பர் இயக்குகிறார். இவர், வைல்ட் ரோஸ், தி ஏரோனாட்ஸ் உட்பட சில படங்களை இயக்கிய இவர், டி.வி. தொடர்களையும் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் இஸ்ரேலிய நடிகை கல் கடோட் (Gal Gadot), ஜேமி டோர்னன் (Jamie Dornan) முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஸ்பை த்ரில்லர் படமான இதில் நடிப்பதை தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஆலியா பட் உறுதி செய்துள்ளார். இதையடுத்து நடிகைகள் சமந்தா, காஜல் அகர்வால், மிருணாள் தாகூர் உட்பட பலர் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in