’புஷ்பா’ இயக்குநருக்கு அக்‌ஷய் குமார் அழைப்பு

‘புஷ்பா’ இயக்குநர் சுகுமார்
‘புஷ்பா’ இயக்குநர் சுகுமார்

’புஷ்பா’ இயக்குநரிடம் தனக்கு ஒரு கதை சொல்லுமாறு, பிரபல இந்தி ஹீரோ அக்‌ஷய் குமார் கேட்டுள்ளார்.

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கும் படம், ’புஷ்பா’. சுகுமார் இயக்கி இருந்த இந்தப் படத்தில், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், தனஞ்செயா, சுனில் உட்பட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு, தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார்.

தெலுங்கு தவிர, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் படம் வெளியாகி இருக்கிறது. தெலுங்கைப் போலவே இந்தப் படம் இந்தியிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அங்கும் வசூலில் சாதனைப் படைத்து வருகிறது. இது பாலிவுட் பிரபலங்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய்குமார், தனக்கு ஒரு கதை சொல்லுமாறு இயக்குநர் சுகுமாரிடம் கேட்டுள்ளார்.

அக்‌ஷய் குமார்
அக்‌ஷய் குமார்

இதுபற்றி இயக்குநர் சுகுமார் கூறியிருப்பதாவது: “படப்பிடிப்பில் இருந்தபோது ஒரு நாள் இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் அழைத்தார். நலம் விசாரித்தார். பின்னர் தனக்கு ஒரு கதை உருவாக்குமாறும் மும்பைக்கு வருமாறும் கேட்டுக்கொண்டார். சரியான ஸ்கிரிப்ட் கிடைத்ததும் அவரை வைத்து படம் பண்ணுவேன். எப்போதும் ஸ்கிரிப்ட்தான் நடிகரைத் தீர்மானிக்கும் என்பதால், இந்தி சினிமாவில் யாருடனும் பணியாற்ற விரும்பவில்லை. ஆனால், அக்‌ஷய்குமாருடன் பணியாற்ற விரும்புகிறேன். அவருக்கு ஏற்ற ஸ்கிரிப்ட் அமைந்ததும் படம் பண்ணுவேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in