இந்தியில் ’செல்ஃபி’ ஆகிறது சூப்பர் ஹிட் ’டிரைவிங் லைசன்ஸ்’

’செல்ஃபி’
’செல்ஃபி’

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ’டிரைவிங் லைசன்ஸ்’ படம், இந்தியில் ’செல்ஃபி’ (Selfiee) என்ற பெயரில் ரீமேக் ஆகிறது.

பிருத்விராஜ், சுராஜ் வெஞ்சரமூடு, மியா ஜார்ஜ் உட்பட பலர் நடித்த மலையாள படம், ’டிரைவிங் லைசன்ஸ்’. மறைந்த இயக்குநர் சச்சி இதன் கதையை எழுதி இருந்தார். லால் ஜூனியர் இயக்கி இருந்த இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. ஒரு கதாநாயகனுக்கும் அவர் ரசிகரான மோட்டார் வாகன ஆய்வாளருக்கும் இடையே நிகழும் ஈகோ மோதல்தான் கதை. இதில் கதாநாயகனாக பிருத்விராஜும், மோட்டார் வாகன ஆய்வாளராக சுராஜ் வெஞ்சரமூடும் நடித்திருந்தனர்.

இம்ரான் ஹாஸ்மியுடன் அக்‌ஷய்குமார்
இம்ரான் ஹாஸ்மியுடன் அக்‌ஷய்குமார்

இதன் இந்தி ரீமேக்கை இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹரின் தர்மா ப்ரொடக்‌ஷன்ஸ் பெற்றுள்ளது. இந்த ரீமேக்கை 'குட் நியூஸ்' இயக்குநர் ராஜ் மேத்தா இயக்குகிறார். பிருத்விராஜ் நடித்த கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமாரும், சுராஜ் வெஞ்சரமூடு நடித்த கேரக்டரில் இம்ரான் ஹாஸ்மியும் நடிக்கின்றனர்.

இம்ரான் ஹாஸ்மியுடன் செல்ஃபி எடுக்கும் புகைப்படத்தையும் பாடல் காட்சி ஒன்றையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள நடிகர் அக்‌ஷய்குமார், விரைவில் இதன் ஷூட்டிங் தொடங்குகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in