‘சாமானியர்களும் பார்க்கலாம்!’ - அக்‌ஷய் குமார் நடித்த படத்துக்கு வரிவிலக்கு அளித்த ஆதித்யநாத்

‘சாமானியர்களும் பார்க்கலாம்!’ - அக்‌ஷய் குமார் நடித்த படத்துக்கு வரிவிலக்கு அளித்த ஆதித்யநாத்

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்துள்ள ‘சாம்ராட் பிருத்விராஜ்’ படத்துக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

லக்னோவில் ‘சாம்ராட் பிருத்விராஜ்’ படத்தைப் பார்த்த பிறகு வரிவிலக்கினை அறிவித்த உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், "இந்தத் திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்படுவதால் சாமானியர்களும் இந்தப் படத்தைப் பார்க்க முடியும்" என்று தெரிவித்தார்.

முகமது கோரிக்கு எதிராகப் போராடிய அரசர் பிருத்விராஜ் சவுகானின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட இந்தத் திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை இன்று முதல்வர் யோகி ஆதித்யநாத் பார்த்து ரசித்தார். நடிகர் அக்‌ஷய் குமார், இயக்குநர் சந்திர பிரகாஷ் திவேதி, துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, போக்குவரத்து அமைச்சர் தயா சங்கர் சிங் மற்றும் பலரும் இந்த சிறப்புக்காட்சியில் இத்திரைப்படத்தை பார்த்தனர்.

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

முன்னதாக புதன்கிழமையன்று, அக்‌ஷய் குமாருடன் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் இந்தத் திரைப்படத்தைப் பார்த்தார். “இந்தப் படம் பெண்களை மதிக்கின்ற, பெண்களுக்கு அதிகாரம் அளிக்கின்ற இந்திய கலாச்சாரத்தைச் சித்தரிக்கிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து டெல்லி வரை நடந்த போர்களில் ஒரு வீரன் சண்டையிடுவதுதான் இப்படத்தின் கதை. இந்தியா பல நூற்றாண்டுகளாகப் படையெடுப்புகளை எதிர்த்துப் போராடி வருகிறது” என அமித் ஷா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in