ரூ.7.8 கோடிக்கு வீடு வாங்கிய அக்‌ஷய்குமார்

1878 சதுர அடி, நான்கு கார் பார்க்கிங் வசதி
அக்‌ஷய்குமார்
அக்‌ஷய்குமார்

நடிகர் அக்‌ஷய்குமார் ரூ.7.8 கோடிக்கு பிரமாண்டமான வீட்டை வாங்கியுள்ளார்.

பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய் குமார். இவர் தமிழில், ரஜினிகாந்தின் ’2.0’ படத்தில் நடித்திருந்தார். இப்போது, பச்சன் பாண்டே, பிருத்விராஜ், ரக்‌ஷா பந்தன், ராம் சேது உட்பட சில இந்திப் படங்களில் நடித்துள்ளார். இந்தப் படங்கள் விரைவில் வெளியாக இருக்கின்றன.

இவர் மும்பை ஜூஹூ பகுதியில் மனைவி ட்விங்கிள் கன்னா மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அந்தேரி மேற்கு பகுதியில் அலுவலகம் வைத்திருந்தார். இந்த அலுவலகத்தை கடந்த டிசம்பர் மாதம் ரூ.9 கோடிக்கு விற்றார்.

நடிகர் அக்‌ஷய் குமார்
நடிகர் அக்‌ஷய் குமார்

இப்போது கர் (Khar) பகுதியில் ஜாய் லெஜண்ட் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.7.8 கோடிக்கு புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். அந்த அடுக்குமாடி குடியிருப்பின் 19 மாடியில் அதை வாங்கியுள்ளார். 1878 சதுர அடி கொண்ட இந்த வீட்டுக்கு நான்கு கார் பார்க்கிங் வசதிகள் இருக்கிறதாம். கடந்த 7 ஆம் தேதி இதற்கான பத்திரப்பதிவு நடந்ததாக மும்பை சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in