`உங்களின் விமர்சனங்கள் கடுமையாக என்னைப் பாதித்துள்ளன'- மன்னிப்புக் கேட்டார் அக்‌ஷய்குமார்

`உங்களின் விமர்சனங்கள் கடுமையாக என்னைப் பாதித்துள்ளன'- மன்னிப்புக் கேட்டார் அக்‌ஷய்குமார்
அக்‌ஷய் குமார்

பான் மசாலா விளம்பரத்தில் நடித்ததற்காக ரசிகர்கள் கடுமையாக விமர்சித்ததை அடுத்து, நடிகர் அக்‌ஷய்குமார் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய்குமார். இவர் தமிழில், ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தில் நடித்திருந்தார். இவர், தனியார் நிறுவனம் ஒன்றின் பான் மசாலா விளம்பரத்தில் அஜய்தேவ்கன், ஷாருக்கான் ஆகியோருடன் நடித்திருந்தார். இந்த விளம்பரத்துக்காக கடந்த சில நாட்களாக, அவரை ரசிகர்களும் நெட்டிசன்களும் சரமாரியாக விமர்சனம் செய்திருந்தனர். இந்நிலையில் எதிர்ப்பு அதிகமானதால், அந்த பான் மசாலா விளம்பரத்தில் நடித்ததற்காக மன்னிப்புக் கேட்டுள்ளார்.

பான் மசாலா விளம்பரத்தில் அக்‌ஷய்குமார், அஜய்தேவ்கன், ஷாருக்கான்
பான் மசாலா விளம்பரத்தில் அக்‌ஷய்குமார், அஜய்தேவ்கன், ஷாருக்கான்

இதுதொடர்பாக அவர் ட்விட்டரில், ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். உங்களின் விமர்சனங்கள் கடுமையாக என்னைப் பாதித்துள்ளன. உங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து எதிர்காலத்தில் விளம்பரங்களில் நடிக்கும் போது கவனத்துடன் நடந்துகொள்வேன். அந்த பான் மசாலா விளம்பர தூதர் ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்கிறேன். ஒப்பந்த கால முடியும்வரை அந்த விளம்பரம் தொடர்ந்து ஒளிபரப்பாகும். அதில் கிடைக்கும் வருமானத்தை நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்துவேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.