`அஜித் 61’ படத்துக்காக பிரம்மாண்ட வங்கி செட்!

`அஜித் 61’ படத்துக்காக பிரம்மாண்ட வங்கி செட்!
ANANDKUMAR

நடிகர் அஜித்குமார் நடிக்கும் அடுத்தப் படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் இன்று தொடங்குகிறது.

நடிகர் அஜித்குமார் ‘நேர்கொண்ட பார்வை’, ’வலிமை’ படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ஹெச்.வினோத் இயக்கும் படத்தில் நடிக்கிறார். போனி கபூர் தயாரிக்கிறார். இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஜிப்ரான் இசை அமைக்கிறார். சுப்ரீம் சுந்தர் சண்டைக் காட்சிகள் அமைக்கிறார்.

ANANDKUMAR

நடிகை தபு ஹீரோயினாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அவர் நடிக்கவில்லை. தென்னிந்திய நடிகை ஒருவர்தான் நாயகி. அவரிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். வங்கியில் நடக்கும் கொள்ளைப் பற்றிய படம் இது என்று கூறப்படுகிறது.

இந்தப் படத்திற்காக ராமோஜி பிலிம் சிட்டியில் மவுன்ட் ரோடு செட் ஒன்றும் பிரம்மாண்டமான வங்கி செட் ஒன்றும் அமைக்கப் பட்டுள்ளது. அங்குதான் படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் நடக்க இருக்கிறது.

இந்தப் படத்தில் அஜித் கொஞ்சம் வில்லத்தனமான கேரக்டரில் நடிக்கிறார். இதன் ஷூட்டிங், பூஜையுடன் இன்று தொடங்குகிறது. இதற்காக, நடிகர் அஜித், தனி விமானத்தில் சில நாட்களுக்கு முன் ஹைதராபாத் சென்றார். அங்கு இரண்டு் மாதங்கள் தொடர்ந்து ஷூட்டிங் நடக்க இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in