மார்ச்சில் தொடங்குகிறது அஜித்தின் 61-வது படம்?

அஜித்
அஜித்

அஜித்குமார் நடிக்கும் அடுத்தப் படத்தின் ஷூட்டிங், மார்ச் மாதம் ஹைதராபாத்தில் தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

’நேர்கொண்ட பார்வை’யை அடுத்து எச்.வினோத் இயக்கத்தில் ’வலிமை’ படத்தில் நடித்திருக்கிறார் அஜித்குமார். இதில் தெலுங்கு ஹீரோ கார்த்திகேயா, வில்லனாக நடித்திருக்கிறார். இந்தி நடிகை ஹூமா குரேஸி நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாக இருந்தது.

கரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக, இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, தியேட்டர்களில் 50 சதவிகித இருக்கைக்கு மட்டுமே அனுமதி போன்ற காரணங்களால், ’வலிமை’ ரிலீஸ் தள்ளிப்போனது.

இதற்கிடையே அஜித் தனது அடுத்தப் படத்துக்கான வேலைகளில் இறங்கிவிட்டார். அஜித்தின் 61-வது படமான இதன் தொடக்க விழா ஹைதராபாத்தில் நடக்க இருக்கிறது. புதிய படத்தில் உடல் எடையை இன்னும் குறைத்து நடிக்கப் போகிறார். இதற்காக அவர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்தப் படத்துக்கான செட் அமைக்கும் பணிகள் அங்கு நடந்து வருகின்றன. இதன் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் அஜித், வில்லத்தனமான கேரக்டரில் நடிக்கிறார் என்கிறார்கள். இந்தி நடிகர் ஒருவர் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்.

61-வது படத்தை தீபாவளிக்கு வெளியிடவும் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in